CARI Infonet

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 8490|Reply: 0

விருட்ச சாஸ்&#

[Copy link]
Post time 19-3-2012 02:11 PM | Show all posts |Read mode

நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சிலவிருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவதுஒரு வகையில் பிரச்னைகள் இருந்துகொண்டு தான் இருக்கும்.. சிலருக்குவிஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு,பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம், ..... இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள்.. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்கவேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய்இருத்தல் வேண்டும். மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்கவேண்டும். தன்னை அறிவதே வாழ்க்கை.நாம் இந்த பிறவியில் எந்தநோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும்ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே..முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்..ஜோதிடம் என்பது அந்த வகையில்ஒரு கருவி நமக்கு. .. நாம்சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படிஇருப்போம்..? நமக்கு எப்போது நேரம்நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்?என்று பல விதங்களில் உங்களுக்குவழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க, நாம் நம்மை அறியாமலேயே நிறையஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அதுபல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்குஉணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதகபலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள்Ph D செய்து தான் ஆக வேண்டும்....


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள் பாவக் கதிர்களைகிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பைஇந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள்கண் படும் இடங்களில் , உங்கள்தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில்(சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்குவிட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றைநட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும்அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ளவிருட்ச சாஸ்திரம்இப்படிஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா


உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது, கூகுள் லெ யோ தேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT


    Forum Hot Topic

     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CARI Infonet

    4-5-2024 09:07 AM GMT+8 , Processed in 0.050102 second(s), 24 queries .

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list