CARI Infonet

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 6407|Reply: 0

தியானம் செய்&#

[Copy link]
Post time 30-4-2012 12:11 AM | Show all posts |Read mode

தியானம்செய்ய உகந்த நேரம் எது?எப்படி செய்வது? எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்குமுன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப்பயன் இல்லை என்பதை விளக்குவதாகஇந்த முதுமொழி அமைந்துள்ளது.

சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில்மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படிஇதனைக் கையாளலாம்? என்பன போன்ற பலஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால்ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மைகொள்ள வேண்டியதில்லை.

மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிகமுக்கிய காரணம் மனத்தில் ஏற்படும்சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்றுகூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியானசலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம்மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளியமுறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்தஅல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில்பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும்குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம்மேற்கொள்ளலாம்.

பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களைசந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றிவருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்டஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்துசுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வைகொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.

தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத்தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்குமிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.

தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர்பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமேகடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறுபலன்களை அடையலாம்.

பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்றநேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத்தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான்பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.

சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலானதரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்துகொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறியவிளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோஏற்றினால் உசிதம். வெண்மை நிறம்பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக்குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிறவிரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்தவண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.

யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம்இருக்கும் போது புலித்தோல், மான்தோல்போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்துதியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாகஅறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல்மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களைஅடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின்தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல்விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம்வேறு எந்த புற தடங்கல்களையும்சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லதுஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கிகண்களை மெதுவாக மூட வேண்டும்.அதிகாலை நேரம் என்பதால் பெரியஅளவில் மற்ற ஒலிகள் உங்கள்சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒருசில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.

தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்குசிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்தநாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில்வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும்.மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீதபிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்குகூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள்காண்பீர்கள் என்பது திண்ணம்.

இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றேநேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!

Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT


    Forum Hot Topic

     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CARI Infonet

    4-5-2024 09:25 AM GMT+8 , Processed in 0.046759 second(s), 24 queries .

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list